Kogilavani / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல் தலைவருமான 'தேசத் தந்தை' மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்வு, கண்டி கெப்பட்டிப்பொல நினைவு மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை(4) நடைபெற்றது.
மலையகக் கலை கலாசார சங்கத்தின் (இரத்தினதீபம் அமைப்பு) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண சபையின் முன்னாள் துணைத்தலைவர் எஸ்.பீ.ரத்நாயக்க கலந்துகொண்டார்.
இதன்போது மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவிக்கப்பட்டதுடன், நிகழ்வின் பிரதம அதிதி, சமூக சேவையாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை சிம்பரநாதனால் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago