2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

“மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கு நிவாரணப்பணி”

Janu   / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் சேர்க்கப்பட்ட 2ம் கட்ட நிவாரணப்பணியே இவ்வாறு புதிய மாவட்ட செயலகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிவாரணப் பொருட்களை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் செயற்படும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களுக்குத் தேவையான தண்ணீர் போத்தல்கள், உலர் உணவு வகைகளான அரிசி, கோதுமை மா, நூடுல்ஸ், பிஸ்கட், டின் மீன்கள், பால்மா உட்பட சிறுவர்களுக்கான உணவு வகைகள், பம்பஸ் மற்றும் பெண்களுக்கான சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள் போன்றவற்றுடன் கற்றல் உபகரணங்கள், பாடக்குறிப்புகள் போன்றவை சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிவாரணப் பொருட்களை மலையகத்திற்கு கொண்டு செல்வதற்காக போக்குவரத்து வசதிகளை சில வர்த்தகர்கள் தாமாகவே முன்வந்து வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எம் எஸ் எம் நூர்தீன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X