Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
மண்சரிவு அபாயம் காரணமாக வெளிமடை சினன் தோட்டத்தில், ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புத்தொகுதிக்கு பின்புறமுள்ள மண்மேடு சரியத்தொடங்கியுள்ளதுடன் நீர் குடியிருப்புத் தொகுதிகளுக்குள் உட்புகுந்தமையினால் 6 குடும்பங்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள், தற்காலிகமாக அவர்;களின் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை உடன் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் வெளிமடை பிரதேச செயலாளர் ஞானா நவரட்ண தெரிவித்தார்.
சீரற்ற கால நிலையைத் தொடர்ந்து இப்பகுதியில் தொடந்தும் மழை பெய்து வருவதனால்; மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago