2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மண்சரிவு அபாயம்: 36 பேர் வெளியேற்றம்

Sudharshini   / 2016 மே 19 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கு.புஸ்பராஜ்

லிந்துலை, சென்கூமஸ் லெமினியர் தோட்டத்தில் நேற்று மாலை  ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 07 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி 36 பேரும்  கொழுந்து மடுவத்திலும் பொது இடங்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால்  குடியிருப்பு பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட இயற்கை அனர்த்த முகாமைதுவ அதிகாரிகளால், மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், 05 மாதங்கள் கடந்த போதிலும் இவர்களுக்கான எவ்வித மாற்று  நடவடிக்கைகளையும் தோட்ட நிர்வாகமும் அரசியல்வாதிகளும் செய்து கொடுக்கவில்லையென பாதிக்கபட்ட மக்கள்  தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .