2026 மே 14, வியாழக்கிழமை

dd

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பதுளை மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக, மடுல்சீமை, வெரெல்லபத்தனை தோட்டம், டூமோ டிவிசன் ஆகிய பகுதியில், மண்சரிவால் பாதிக்கப்பட்டு, கல்லுல்லை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள 55 குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோருக்கு, பெருந்தோட்ட கைத்தொழில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், உலர் உணவுப் பொருள்களை வழங்கினார்.  

இதன்போது உரையாற்றிய அவர்,  

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் வாழ்கின்ற மக்கள், பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் இதனால், இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.  

இந்நிலையில், பதுளையின் பிரதிநிதி என்ற வகையில், தன்னுடைய சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தன்னிடம் உண்டு என்றும் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் சாதாரண நிலைமைக்கு வருவதற்கான தன்னாலான உதவிகளைத் தான் செய்வதாகவும் அத்தோடு, மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு தனி வீட்டுத் திட்டம் வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .