2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மண்மேடு அப்புறப்படுத்தப்பட்டது

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பொரலாந்தை பீற்று தோட்டத்தில், நீண்ட நாள்களாகக் குவிக்கப்பட்டிருந்த மண்மேடை அப்புறப்படுத்தும் பணிகள், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்,  இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.

மேற்படிப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த மண்மேட்டினால், வடிகான் தடைப்பட்டதால் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசத் தொடங்கியதுடன், பிரதேச மக்களும் பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர்.

இவ்விடயம் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளார் வேலு யோகராஜின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து,  மண்மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, தவிசாளர் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்குப் பணித்திருந்தார்.

இதற்கமைவாக, தவிசாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்படி மண்மேடு அகற்றப்பட்டதுடன், வடிகானும் துப்புறவு செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .