Editorial / 2018 மே 06 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனவெல கிராம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆர்.எம். லகிரு (வயது 21) என்ற இளைஞர் உயிரிழந்ததுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் அரையொன்றில் சகோதரர்கள் இருவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் வீட்டின் அருகில் உள்ள மண்மேடு திடீரென சரிந்து வீட்டின் மீது வீழ்ந்துள்ளது.
இதில் சகோதரர்கள் இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள், விரைந்து மண்ணில் சிக்குண்டவர்களை மீட்டுள்ளனர். எனினும், இருவரில் மூத்த சகோதரர் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய இளைய சகோதரர், நாவலப்பிட்டி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளையில் உயிரிழந்தவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago