Sudharshini / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மத்திய மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் கல்வி அமைச்சு இன்மையால், மாகாணத்தில்; 400க்கும் அதிகமான பாடசாலைகளில் வளப்பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலையத்துக்குட்பட்ட லிந்துலை, நாகசேனை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பின்னோயா கணேஷா தமிழ் மகா வித்தியாலயங்களில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அங்கு மேலும் தெரிவித்த அவர், 'நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோரிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக பாடசாலைகளுக்குக் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாகசேனை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதோடு மைதானம் ஒன்றையும் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னோயா, கணேஷா வித்தியாலயத்துக்கு கட்டடம் ஒன்றை அமைத்துக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மலையக தமிழ் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்க நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளங்கள் அதிகமாக காணப்படும் பாடசாலைகளைவிட வளங்கள் குறைவாகவுள்ள பாடசாலைகளின் பெறுபேறுகள் சிறப்பாகவுள்ளன.
எனவே, மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்கள் கடமை உணர்வுடன் செயலாற்ற வேண்டும். மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் அரசியல் தலையீடு காரணமாகவே கல்விப் பெறுபேறுகளில் மாணவர்கள் முன்னேற்றமடையவில்லை என கூறப்படுகின்றது. எதிர்காலத்தில் ஆசிரியர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாது தங்களின் முன்னேற்றத்தையும் மாணவர்களின் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago