Kogilavani / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மதுபானசாலைகள் காணப்படும் ஒவ்வொரு நகரங்களிலும் கணினி, இணைய வசதிகளுடன் கூடிய பொதுநூலகம் கட்டியெழுப்பப்படும் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
டயகம நகர் சௌமிய மூர்த்தி பாடசாலையில், நேற்று முன்தினம் (10) நடைபெற்ற திறன் விருத்தி நவீன கற்கைநெறி கூடத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மலையகப் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படுகின்ற ஸ்மாட் வகுப்புகள், இலங்கை இந்திய சமூதாய பேரவையின் அனுசரணையில் ஆரம்பிக்கப்படுவதாகவும் அதற்கும்
தனது அமைச்சிக்கோ எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மலையகத்திலுள்ள ஒவ்வொரு நகரங்களிலும் மதுபானசாலைகள் காணப்படுவதாகவும் ஆனால் பொதுநூலகத்தைக் காணவில்லை என்றும் தெரிவித்ததடன், தனது அமைச்சின் வேலைத்திட்டத்துக்குபு அமைய அமைய எந்தெந்த நகரங்களில் மதுபான விற்பனைசாலைகள் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் கல்வி மற்றும் தொழிற்நுட்ப அறிவை பெறுக்கிக்கொள்ள, கணினி, இணைய வசதிகளுடம் பொதுநூலகம் அமைக்கப்படும் என்றார்.
டயகம பிரதேச மக்கள், தாயில்லா குழந்தைகள் எனத் தெரிவித்த அவர், தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் இப்பிரதேசத்துக்கு வந்து செல்வதாகவும் இதன் காரணமாகவே தான் அடிக்கடி இப்பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வுகளையும்,அபிவிருத்திகளையும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago