Niroshini / 2021 மே 02 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நதீக தயா பண்டார, மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் தற்போது, கொரோனா சிகிச்சை மையங்களாக செயற்பட்டு வரும் 9 வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக இன்னும் 12 பிராந்திய வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனையை நாளொன்றுக்கு 2,000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கண்டி தேசிய வைத்தியசாலை, பேராதனை பல்கலைக்கழகத்தில் 2 இடங்கள் மற்றும் நுவரெலியா பொது வைத்தியசாலை ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக தெல்தெனிய ஆரம்ப வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கு புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இதற்கமைய, நாளையில் (03) இருந்து தெல்தெனிய ஆரம்ப வைத்தியசாலையில் பிசிரேம் பரிசோதனை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இங்கு தம்புள்ளை, மாத்தளை பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், மத்திய மாகாணத்தில் தற்போது கொரோனா சிகிச்சை மையங்களாக செயற்பட்டு வரும் 9 வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக இன்னும் 12 பிராந்திய வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான சிற்றூழியர்களையும் ஏனைய ஊழியர்களையும் தேவைக்கேற்ப புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பல்லேகலையில் உள்ள மாகாண விவசாய அமைச்சில் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை பொல்கொல்லைக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று, நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago