2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மந்திரவாதி உட்பட மூவர் கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளுடன் மந்திரவாதியொருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை, தம்பகல்ல பொலிஸார் திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

தம்பகல்ல, மீகாபிட்டிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு மந்திரவாதியொருவர் உட்பட மூவர் சென்று பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு, குறித்த பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக கடை உரிமையாளரிடம் ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை கொடுத்துள்ளனர்.

எனினும், வர்த்தக நிலைய உரிமையாளர், அது போலி நாணயத்தாள் என அடையாளம் கண்ட நிலையில், அது குறித்து பொலிஸாருக்கு அலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, வர்த்தக நிலையத்துக்கு விரைந்த பொலிஸார், போலி நாணயத்தாளை கைப்பற்றியதுடன், மேற்படி மூவரையும் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .