Janu / 2026 ஜனவரி 18 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகர, கடந்த 16 ஆம் திகதி அன்று வழங்கினார்.
மொனராகலை, ஹுலந்தாவ தெற்கு, கெமுனுபுரவைச் சேர்ந்த யடபாலகே நீல் ஸ்டான்லி ஜெயரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு தனது மனைவி கே.எம். சுஜாதா மீது குற்றம் சாட்டப்பட்டவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மனைவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கொலை குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சந்தேக நபருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்தார்.
சட்டத்தரணி சோமரத்ன ஹேரத் பிரதிவாதிக்காக ஆஜரானார், அதே நேரத்தில் அரசு வழக்கறிஞர் துமிந்த டி அல்விஸ் வழக்குத் தொடர தலைமை தாங்கினார்.
9 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
4 hours ago