Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
“நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன்” எனக் கோரி, வட்டகொட - மடக்கும்புர -வேவஹென்ன கிராமவாசியான எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளைப் பெற்றிருந்த வேளையில், அதனை அரச சொத்தாக அபகரிக்கத் திட்டம் தீட்டுகின்றார்கள். இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இதற்கென 2016.10.18ஆம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதியை பெறுவதற்காக 12 – 15 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையும் அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
இருந்தும் எனக்குச் சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளேன். ஆகையால், இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு வருகின்றேன் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025