2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை

R.Tharaniya   / 2025 ஜூலை 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை அகரவத்தை ஊடாகவெளி ஓயா வீதியில் சைபிரஸ் மரமொன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நுவரெலியா தொடரும் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் செஸ்பிரஸ் மரம் வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.

இதனால் அட்டன்,  வட்டவளை  அகரவத்தை ஊடாக வெளி ஓயா வரையிலான    பொது போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது.

மரத்தை வெட்டியகற்றியப் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .