Kogilavani / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
மலையக மக்களின் பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு செயற்படவுள்ளதாக இலங்கைக்கான பிரத்தானிய
தூதுவராலயத்தின் பிரதி தூதுவர் திருமதி. லோரா டேவிஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'இலங்கை நடுத்தர வருமானமுள்ள நாடாக இருந்தாலும் கூட, எமது உதவிகளை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இலங்கை நாட்டினுடைய அபிவிருத்திப் பணிகளுக்கான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
'ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி, ஒத்துழைப்பு
திட்டங்களினூடாக இதனை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம். தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக எதிர்காலத்தில் மலையக அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .