Sudharshini / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக, மலையக மக்களின் அபிவிருத்திக்காகவும் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ள மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், இதற்கு உலக வங்கியும் உதவும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிதியைக் கொண்டு, மலையகத்தின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மக்களுக்கு சிறந்த முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கடந்த காலங்களில் நாடாளுமன்றப் பதவிகளுடன் இருந்த மலையக அரசியல் தலைவர்கள், அவர்களுடைய சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே தவிர, மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளையும் முன்நின்று தீர்க்கவில்லை.
மலையக மக்கள் எனக்கு வாக்களித்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். இதுவரை, தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க, என்னால் முடியும் என்ற ஒரு நம்பிக்கையின் காரணமாகவே எனக்கு அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'எனது அமைச்சுப் பதவியை வைத்து, மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன். அத்தோடு 5 வருட காலங்களில் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் போன்ற பல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன்' என அவர் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago