2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மலையகத்தில் 60% மக்களை வறுமை ஆட்கொண்டுள்ளது: திகா

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதர்ஷினி சாமிவேல்

'உலக வங்கியின் அறிக்கையின்படி, இலங்கையில் 40 சதவீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

தோட்டப்பகுதிகள் 60 சதவீதமான மக்கள் வறுமையின் கீழ் வாழ்கின்றனர். இந்த மலையகச் சமூகம், அனைத்து விடயங்களிலும் பின்தங்கிய நிலையிலே உள்ளது என்பதை உலக வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது' என மலைநாட்டு அதிகரித்தல், கிராமங்கள், உட்கட்மைப்பு வசதிகள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஐந்தாண்டு செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற நிதி நிறுவனங்கள், இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நிதி உதவிகளையும் தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது' என்றார்.  'ஏனைய சமூகங்களுடன் பெருந்தோட்ட மக்களை ஒப்பிடும்போது, சமூக அபிவிருத்து உட்பட அனைத்து விடயங்களிலும்  பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையை மாற்றி, ஏனைய சமூகங்களுடன் பெருந்தோட்ட மக்களையும் சம நிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்;' எனவும் அவர் குறிப்பிட்டார்.

'இந்த 5 ஆண்டு  திட்டத்தை நடைமுறைப்படுத்த 10 பில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. இதில் 80 சதவீதம் - குடிநீர், வீடமைப்பு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசிகளுக்கு தேவைப்படுகின்றது.  இத்திட்டத்தின் கீழ், 5ஆண்டுகளில் 66 ஆயிரம் வீடுகளை அமைத்தல், கல்வி பொது தராதர சாஃத மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் உயர்வை 5 மடங்காக அதிகரித்தல், தோட்ட  வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல், சமூகத்தை தொடர்புபடுத்தல் என்ற வகையில் தோட்டப் பெண்களை அரசியலில் உள்வாங்குதல், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், இளைஞர், யுவதிகளுக்கு தொழில்நுட்ப தகைமகளுக்கு எற்ப வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தல், மாகாண சபைகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தோட்ட வைத்தியசாலைகளை பெறுப்பேற்று சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என பல திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் சுமார் ஒரு இலட்சம் மக்கள், மலசலகூட வசதியின்றி வாழ்கின்றனர். எனவே, இம்மக்களின் அடிப்படை வசிகளை பெற்றுக்கொடுத்து, அவர்களுக்கும் சமூகத்தில் ஓர் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்போம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .