Janu / 2026 ஜனவரி 20 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திட்வா புயலுக்கு பின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வேலைத்திட்ட காணி வழங்கல் மற்றும் வீடு கட்டல் ஆகிய அரசாங்க செயற்பாடுகளில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் பாரபட்சம் காட்டுகிறது என சுட்டிக்காட்டிய மனோ கணேசன் எம்.பி, மலையக காணி உரிமையை வழங்குவதற்காக, ஜிஎஸ்பியை நிபந்தனையாக்குக என தனது பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டிடனம் தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அனுராதபுரத்தில் ஆரம்பிக்க பட்ட வீடு கட்டல் திட்டத்தில் ஒவ்வொரு பாதிக்க பட்ட குடும்பத்துக்கும், ஐம்பது இலட்சம் செலவில் அரசாங்கம் வீடு கட்டி கொடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்து உள்ளார். ஆனால், இந்த ஐம்பது இலட்சம் ரூபாய் வீடு கட்டல், இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வீடமைப்பு திட்டத்தின் கீழ், அனுராதபுர மாவட்டம் உட்பட கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை, மாவட்டங்களில் பாதிப்புகளை எதிர்கொண்ட மலையக தமிழ் மக்களுக்கும். இடையில் காட்டப்படும் இரட்டை நிலை அரசாங்க அணுகுமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதர் ரெமி லாம்பெர்ட்டை கொழும்பில் உள்ள மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில் மனோ எம்பி தலைமையிலான தமுகூ பிரதிநிதிக் குழு சந்தித்தது. இந்த சந்திப்பில், தமுகூ பிரமுகர்கள், பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...
1/ எனது இல்லத்தில், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லாம்பர்ட் அவர்களை சந்தித்து, தித்வா பேரழிவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்தபோதிலும், மலையக தமிழ் மக்களுக்கு — குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் — அரசின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding SriLanka) வீடமைப்பு திட்டத்தின் கீழ் திட்டமிட்ட முறையில் விலக்கி வைக்க படுகிறார்கள் என்பதை தூதருக்கு உண்மை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.
2/ அரசின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூ.5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டுவருகிறது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும்.
3/ மலையக சமூகத்துக்கே உரிய, இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி, மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை சந்திக்க பலமுறை கோரிய போதும், அந்த கோரிக்கைகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
4/ இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக இலங்கை மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள், சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கூடிய தனது நல்லுறவுகளை, பிரான்ஸ் பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.
5/ மேலும், முன்னணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால், வழங்கப்படும் ஜீஎஸ்பி+ வரி சலுகைகளுக்கான நிபந்தனைகளாக முன்வைக்க பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம்.

8 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
1 hours ago