Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மலையகச் சிறுமி இசாலினியின் மரணம் இடம் பெற்று அதனை மறப்பதற்குள் வீட்டு வேலைக்கு, அனுப்பட்ட மற்றும் ஒரு மலையகச்சிறுமி மரணமடைந்துள்ளமை பாரிய கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது போன்ற துயரங்கள் தொடராது இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேணடும் எனவும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் தெரவிக்கின்றது.
கண்டிலுள்ள அதன் தலைமையகத்தில் நடத்திய ஊடாக சந்திப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவி சத்யவாணி சரசகோபால் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
அன்று ஒரு இசாலினியை இழந்தோம். இன்று ஒரு ரமணியை இழந்துள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல இசாலினிகளையும், ரமணிகளையும் இழக்க இடமளிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
எனவே கம்பஹ பிரதேசத்தில் வீடு ஒன்றில், பணி புரிந்து கொண்டிருந்த சமயம் உயிரிழந்த, மஸ்கெலியாவைச் சேர்ந்த ரமணியின் மரணம் தொடர்பான முறையான விசாரணை இடம்பெற்று அது பற்றிய உண்மைகள் வௌிப்படுத்தப்பட வேண்டும்.
இது போன்ற நிலைமைகள் அடிக்கடி ஏற்பட, வீட்டு வேலைத் தொழில் தொடர்பாக சரியான சட்ட திட்டங்கள் இன்மை ஒரு முக்கிய காரணமாகும். எனவே வீட்டு வேலைத் தொழிலாளர் தொடர்பாக சரியான சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்.
வீட்டு வேலைத் தொழில் தொடர்பாக சட்ட பாதுகாப்பு வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் கடந்த 10 வருடங்களுக்கு மேல் போராடி வருகிறது. இன்று நாட்டில் பல்லாயிரக்கணக்கான வீட்டு வேலை தொழிலாளர்கள் நாடாளாவிய ரீதியில் பணியாற்றிய போதும் அவர்களுக்கு சரியான சட்ட பாதுகாப்பு இன்மை காரணமாக இன்று பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எல்லாக் காலக்கட்டங்களிலும் ஆட்சிக்கு வரும் அரசுகள் இது விடயமாக அக்கறை செலுத்தாத நிலையை காண்கிறோம்.
எனவே தொழிலாளர் சட்டத்தில் வீட்டு வேலைத் துறையையும் இணைக்கும் படி, வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025