Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
மலையக மக்களின் பிரச்சினைகளை, ஐந்து மொழிகளில் பேசுவதற்குத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், 'சிலோன் டீ' என்கிற முகவரியை இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களே வழங்கினார்கள் என்றார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சிலோன் டீ' என்ற முகவரியை, தோட்டத் தொழிலாளர்களே வழங்கினார்கள் என்றும் மலையகப் புகையிரதப் பாதைகள், தேயிலை, தென்னை என அனைத்தும் உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
“மலையகத்தில் அனைவருக்கும் இன்னும் தனி வீடுகள் இல்லை. பாதைகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. மலையக மக்கள் எப்போதும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. ஆயிரம் ரூபாய் சம்பளம் எங்கே? ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. பொருளாதாரத்தில் மலையக மக்கள் பின்தங்கியிருந்தாலும், கல்வியில் உயர்வடைந்திருக்கிறார்கள்.
“நாங்கள் சகலகலா வள்ளவர்களாக இருக்கிறோம். அனைத்து மொழிகளிலும் மலையக மக்கள் சார்பாக பேசுவதற்கு நாம் நாடாளுமன்றில் இருக்கிறோம். தமிழ், சிங்கள, ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி ஆகிய மொழிகளிலும் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
“மலையக மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏனைய சமூகங்களைப்போல அனைத்து வரப்பிரசாதங்களும் மலையக மக்களுக்குச் சென்றடைய வேண்டும்.
“பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை அரசாங்கம் மீள பெற வேண்டும். பதுளையில் மாத்திரம் 60 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன” என்றும் அவர் மேலும் கூறினார்.
32 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
3 hours ago