Editorial / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டி இகுருஓயா மற்றும் கலபட புகையிரத நிலையங்களுக்கு இடையில் பென்ரோஸ் நிலையத்திற்கு அருகில் திங்கட்கிழமை (02) மாலை 3.15 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் வரையிலும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையம் வரையிலும், கொழும்பு மற்றும் கண்டியிலிருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் நாவலப்பிட்டி ரயில் நிலையம் வரையிலும் இயக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது,
4 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
23 minute ago