Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 17 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு மிக்க ருஹுணு கதிர்காம ஆலயத்தில் நடைபெறும் (2025)ஆம் ஆண்டிற்கான எசல பெரஹராவில் பங்கேற்க மலையகத்தில் இருந்து பாத யாத்திரை செல்லும் இரண்டாவது யாத்ரீகர்கள் குழு திங்கட்கிழமை (16) அன்று மதியம் மஸ்கெலியா நல்லதண்ணியிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
இந்தக் குழுவில் 22 பெண்கள் உட்பட நாற்பது பேர் அடங்குவதுடன் அவர்கள் மஸ்கெலியா, சாமிமலை, ஹட்டன், நுவரெலியா, வெலிமட, பண்டாரவளை, வெல்லவாய, தனமல்வில, கும்பல்கம, புத்தல மற்றும் யால சரணாலயம் வழியாக 275 கிலோமீட்டர் நடந்து சென்று குழு ஜூன் 26 ஆம் திகதி கதிர்காமத்தை அடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாத்ரீகர்கள் ஒரு நாளைக்கு 40-50 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாகவும், குறித்த வீதியில் உள்ள மத இடங்கள் மற்றும் ஓய்வு இல்லங்களில் இரவு தங்கி, மறுநாள் மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்குவதாகவும் வீதியின் இருபுறமும் உள்ள மக்கள், யாத்ரீகர்களின் தேவைக்கேற்ப உணவு மற்றும் பானங்களை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஞ்சித் ராஜபக்ஷ
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago