2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு

மொஹொமட் ஆஸிக்   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் நிலவும் கடும் வரட்சியான வானிலை காரணமாக, நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன், இதனால் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்களுக்கு, குடிநீர் மட்டுப்படுத்தப்பட்டே வழங்கப்படுவதாகவும் இதனால் தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வரட்சியான வானிலையைக் கருத்திற்கொண்டு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு,  நீர் விநியோக அதிகார சபை, பாவனையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதற்கும் நீரை வழங்கும் மஹாவலி கங்கையின் நீர் மட்டம் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதுடன், பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்கு கிடைக்கும் நீரின் அளவும் குறைவடைந்துள்ளதாகவும்  நீர்த்தேக்கத் திட்ட பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  விக்டோரியா  நீர்த்தேக்கத்துக்கு நீர் அனுப்புவது, முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்  போவதென்ன நீர்த்தேக்கத்துக்கு நீரை அனுப்புவது  மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .