Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பெருந்தோட்டங்களில் பதிவு செய்யாத (கைக்காசு)தொழிலாளர்களை வைத்து தோட்ட கம்பனிகள் எப்படி சூட்சுமமாக லாபம் உழைத்து வருகிறார்கள், வேலைக்கு தொழிலாளர்கள் இல்லை என்பது பொய் கதை -பெருந்தோட்டங்கள் தொடர்ந்தும் இயங்கும்” - பேராசிரியர் சந்திரபோஸ்
“மனிதனுக்கு பதிலாக தொழிநுட்பம் வேலைசெய்ய ஆரம்பிக்கும் அது தொழிநுட்பத்தை பயன்படுத்த விரும்பாதவர்களை கைவிட்டுவிடும் ஆக தொழிநுட்பத்தோடு பயணிக்காவிட்டால் அது எம்மை கைவிட்டுவிடும், மலையகத்தில் டிஜிட்டல் கற்றலின் சாத்தியங்கள்” - கலாநிதி நவரட்ணராஜா
“வறுமை காரணமாக பல்கலை கல்வியை எத்தனையோ மலையகம் மாணவர்கள் இடைநிறுத்தியுள்னர்” - கலாநிதி எஸ் .கருணாகரன்
போன்ற மூத்த எழுத்தாளர்களின் படைப்பாற்றலை வெளிகொணர்ந்த, ”மலையகம் 200க்கு அப்பால் ” தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சனிக்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் ஞாபாகர்த்த குழுவின் தலைவர் எம் வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ,பிரதம அதிதிகளாக மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சசர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெருந்தோட்டம் சமூகம் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் ,மலையகத்தின் மூத்த எழுத்தாளர்கள் ,பேராசிரியர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
2 hours ago