Editorial / 2022 ஒக்டோபர் 14 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}


செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட, ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மவுசாகல தோட்டத்தில், தொழிலாளர்கள் பறிக்கும் பச்சை கொழுந்தை அதே தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் அறைக்குமாறு கோரி அந்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களுடைய தோட்டத்தில் லக்கம், சீர்பாதம்,ரதபூட்,சீட்டின் மற்றும் மவுசாகலை ஆகிய ஜந்து பிரிவில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு பணி புரியும் தோட்டத் தொழிலாளர்கள் பறிக்கும் பச்சை கொழுந்து அதேதோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் அறைக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம். அதற்கு தோட்ட நிர்வாகம் உரிய பதிலை இதுவரையிலும் வழங்கவில்லை.
அவ்வாறு அறைத்தால், எங்களுடைய தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு தேயிலை தொழிற்சாலையில் வேலைக்கிடைக்கும் என்று தெரிவித்த தொழிலாளர்கள், தோட்டக் காரியாலயத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago