2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியாவில் காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. ரஞ்சித் ராஜபக்‌ஷ

 கடந்த 3 நாள்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவியொருவர் மவுசாக்கல நீர்த்தேக்கத்திலிருந்து இன்று  (4) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் உறவினர்களால் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸ் நிலையதிபர் டிரோன் ரத்னாயக்க தெரிவித்தார்.

மஸ்கெலியா- கிளென்டின் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 3 நாள்களாக உயிரிழந்த மாணவியைக் காணவில்லையென, அவரது உறவினர்களால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு பின்புறமுள்ள நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மீதப்பதாக, குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் ஹட்டன் நீதவானின் விசாரணைகளின் பின்னர் பிரதேச பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .