2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மஹிந்தவிடம் கொடியை கொடுப்போம்

Kogilavani   / 2016 ஜூலை 26 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தப் போதிலும் அவருக்கு மக்கள் ஆதரவு கிடையாது. உண்மையான மக்கள் ஆதரவு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது. எனவே, மக்களை ஒன்றுதிரட்டி எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடியை மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்போம்' என கண்டி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

'ஒன்றிணைந்த எதிரணியின் பாதயாத்திரை முடிந்தவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்றும் அவர் கூறினார். மாத்தளை, அலவத்துகொடையில் ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற 95 உறுப்பினர்களில் 45 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளனர். ஆகையால், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் பிரதிபலிப்பதாக இல்லை.  

எனவே, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 51 பேரும் மக்களை ஒன்று திரட்டி கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரையை  நடத்துவதற்குத் தீர்மானித்தோம். அப்பாதயாத்திரை 28ஆம் திகதி ஆரம்பமாகி, முதலாம் திகதி நிறைவடையும்.  

மக்கள் பலத்தால் நாங்கள் ஆரம்பிக்கும் புதிய இயக்கத்தின் ஊடாக எதிர்வரும் தேர்தலில் முன்னின்று வெற்றிபெருவோம். எமது வெற்றியின் பின்னர் பலர் பின் கதவால் ஓடி விடுவார்கள். அதன் பிறகு, நாங்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடியை மஹிந்தவிடம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .