2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

‘மாடிலயம் அமைத்தவர்கள் பேச அருகதையற்றவர்கள்’

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விரைவில் சுமார் 2,800 காணி உறுதிப்பத்திரங்கள் ஒரே நாளில் பிரதமர் தலைமையில் வழங்கிவைக்கும் ஏற்பாடுகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது” என, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் இணப்புச் செய்லாளர் ஜி.நகலேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

 

மேலும், “மலையகததில் மாடிலயம் அமைத்தவர்கள் இன்று முன்னெடுக்கப்படும் தனிவீட்டுத் திட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு எவ்விதத்திலும் அருகதை அற்றவர்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தில் முன்னெடுக்கப்படும் தனிவீட்டுத்திட்டம் மந்த கதியில் இடம்பெறுவதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எஸ் அருள்சாமி விடுத்திருக்கும் அறிக்கை குறித்து, பதில் அறிக்கை விடுக்கும் முகமாக, அவர் நேற்று  (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக, இன்று மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிவீட்டுத்திட்டம், மலையக வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமைகின்றது. லயத்துச் சிறைகளில் அடைக்கப்பட்ட இந்த மக்கள் இப்போதுதான் தமது குடியிருப்பு தொடர்பில் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை ஆளும் அரசாங்கத்திடம் இருந்து பெறத்தொடங்கியுள்ளனர்.

“அண்மையில் ஜனாபதியின் கரங்களில் இந்த மக்களுக்கு முழுமையான உரித்துடைய காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், விரைவில் சுமார் 2,800 காணியுறுதிப்பத்திரங்கள் ஒரே நாளில் பிரதமர் தலைமையில் வழங்கிவைக்கும் ஏற்பாடுகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

“தங்களது அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் 78 ஆண்டுகளை பூர்த்தி செய்வோர், ஆண்டுக்கு இரண்டாயிரம் என தனிவீடுகளை அமைத்திருந்தாலே இன்று ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தனிவீடுகளை தொழிலாளர்களுக்காக அமைகத்திருக்கலாம். ஆனால், அப்படியொரு காத்திரமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்காத இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் லயத்துக்கு மேலே இன்னுமொரு லயத்தை கட்டும் மாடி லயன் முறைமையையே மலையக மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில், இவர்கள் தனிவீட்டுத்திட்டம் மந்த கதியில் நடப்பதாக கருத்துக் கூறுவது நகைப்புக்குரியது.

இந்திய வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது மடடுமல்லாமல், எதிர்வரும் ஐந்து வருட காலதத்தில், 50 ஆணிரம் தனிவீடுகளைக் கட்டும் வேலைத்திட்டம் எமது அமைச்சு வசம் உள்ளது. அதனைப் பார்வையாளர்களாக இருந்து பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமே இ.தொ.காவின் வேலையாக இருக்கும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .