2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாணவி துஷ்பியோகம்: 53 வயதான ஆசிரியர் கைது

Editorial   / 2023 ஏப்ரல் 21 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இந்த ஆசிரியர், 2 பிள்ளைகளின் தந்தையாவார்.

தன்னிடம் கற்கும் 14 வயதான மாணவியை மாலை​நேர மேலதிக வகுப்புக்காக தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். 

இந்நிலையில், மாலை நேர வகுப்பின் போது இடைவேளை வழங்கி அனைத்து மாணவர்களையும் வெளியே செல்லுமாறு கூறிவிட்டு குறித்த மாணவியை மட்டும் பேச வேண்டும் என நிற்குமாறு தெரிவித்துள்ளார். 

பின்னர் தனது கைபேசியில் ஆபாச காணொளிகளை எடுத்து அம்மாணவியை அதை பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி அதை பார்க்க மறுத்த போது மாணவியை பின்னால் இருந்து அணைத்தபடி தன்னுடைய கைபேசியில் செல்பி எடுத்துள்ளார்.

அதன்பின் வேறு பலவாறும் மாணவியோடு குறித்த ஆசிரியர் புகைப்படம் எடுத்துள்ளார். 

இவ்விடயம் பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட ஆசிரியரை விசாரணை செய்த போது அவரது கைபேசியில் ஆபாச காணொளிகளும் புகைப்படங்களும் இருந்ததை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை   பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராமு தனராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X