Freelancer / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை வாங்குவதற்காக வந்த நான்கு இளைஞர்களும், குறித்த பெண்ணும் அநேற்று கைது செய்யப்பட்டதாக மாத்தளை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 7,920 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் வீட்டிற்கு போதைப்பொருள் வாங்க வந்த இளைஞர்கள் அல்வத்தை, பண்டாரபொல மற்றும் முவன்தெனிய பிரதேசங்களில் வசிப்பவர்களாவர்.
சந்தேக நபர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (R)
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026