2026 மே 01, வெள்ளிக்கிழமை

மானை இறைச்சியாக்கிய இருவர் கைது

எஸ்.சதிஸ்   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் வனப்பகுதியில், மரை வேட்டையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவரை, பொகவந்தலாவ பொலிஸார், நேற்று (10) மாலை கைதுசெய்துள்ளதுடன், மேலும் ஒருவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி மூவரும், மரையை வேட்டையாடி, அதனது இறைச்சியை விற்பனை செய்வதற்காக, பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப் பகுதிக்கு ஓட்டோ ஒன்றில் கொண்டு சென்றபோதே, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக, கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளாரென்றுத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 20 கிலோகிராம் இறைச்சியும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .