Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் பிரதான பஸ் நிறுத்துமிடத்தை அண்மித்த பிரதேசங்கள் உரிய முறையில் சுத்தப்படுத்தப்படாமையால், பயணிகளும், மக்களும், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
குப்பைகளை முறையாக அகற்றாமையால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாற்றம் முகஞ்சுளிக்கச் செய்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுமட்டுமன்றி கொசுக்கள் மற்றும் நுளம்புகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. பெருக்கமும் ஏற்பட்டுள்ளது என்றும் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆகையால், ஹட்டன்-டிக்கோயா நகர சபையினர் மேற்படி விவகாரத்துக்கு தீர்வு காணவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையேல், பஸ்களுக்காக காத்திருக்கும் போது, நுளம்புகளின் கடிக்களுக்கு உள்ளாக நேரடியும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சுதத் எச்.எம்.ஹேவா

3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago