2025 ஜூலை 31, வியாழக்கிழமை

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயம்

Janu   / 2025 ஜூலை 27 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று கொட்டகலை - ஹட்டன் பிரதான வீதியின் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செ.தி. பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .