Freelancer / 2025 ஜூலை 30 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் முச்சக்கவண்டி ஒன்று நேற்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025