2026 மே 07, வியாழக்கிழமை

முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பதால் பாவனையாளர்கள் அவதி

சுஜிதா   / 2020 மார்ச் 18 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் தலவாக்கலைக் கிளைக்கு உட்பட்ட பகுதிகளில், முன்னறிவித்திலின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (17) இரவு முதல் இன்று மதியம் வரை, தொடர்ச்சியாக மின் துண்டிக்கப்பட்டிருந்ததாக, பாவனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த மின் துண்டிப்பு தொடர்பில் அறிந்துகொள்வதற்காக,  இலங்கை மின்சார சபையின் அவசர இலக்கமான 1987க்கும் தலவாக்கலை பிராந்திய நிலையத்துக்கும் அழைப்பை ஏற்படுத்திய போதிலும் உத்தியோகத்தர்கள் எவரும் தொலைபேசிக்கு பதிலளிக்க மறுத்ததாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். 

மின் துண்டிப்பு காரணமாக, தலவாக்கலை பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் இதன்காரணமாக,  பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .