Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில், நாவுல நகரில் காணப்படும் மிகப் பழமையான பாரிய மரம் ஒன்று, முறிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது என, நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாவுல பிரதேச செயலகம், நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள இம்மரத்தின் கிளைகள், வீதியின் மறுபுறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு மேலாகக் காணப்படுகின்றன. இவ்வீதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களும், மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இம்மரத்தை வெட்டி அகற்றுவதற்கும், தமது நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, மாத்தளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 minute ago
38 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
47 minute ago
1 hours ago