Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று( 21)காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் திணறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ள அதே நேரம் அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரைந்து செயல்பட்ட பாடசாலை அதிபர் கம்பளை கல்வி வலயத்திற்கும், மாகாண கல்வி பணிமனைக்கும் புஸ்ஸலாவ பொலிஸாருக்கும் அறிவித்ததன் பயனாக மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிஸார் கம்பளை பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago