2026 ஜனவரி 21, புதன்கிழமை

மூடியிருக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தால் பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா         

 

பசறை - கமேவலை தோட்டப் பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டிருப்பதனால், தாய்மார்கள் தோட்டர்தொழிலுக்கு செல்லாமல், தாம் தமது குடியிறுப்புக்களில் இருந்தவாரே, தமது பிள்ளைகளைப் பராமரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தரைத்த அப்பகுதி மக்கள், கமேவலை தோட்டத்தில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர், சிறுவர் பராமரிப்பு நிலையம் இருந்ததாகவும் நிலையம் 15 பிள்ளைகளுடன் அந்தச் சிறுவர் பராமரிப்பு சிறப்புற இயங்கி வந்ததாகவும் கூறினர்.

இந்நிலையில், அந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த பெண், பிறிதொரு தொழிலுக்கு சென்றுவிட்டதை அடுத்து, குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டு விட்டதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், கடந்த  ஐந்து வருட காலமாக, குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் மூடிய நிலையிலேயே காணப்படுவதாகவும் கூறினர்.

இந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையத்தைத் திறக்குமாறு, தோட்ட நிருவாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சாடிய அப்பகுதி மக்கள்,  இந்நிலையினால், பெருந்தோட்டத்தில் தொழில்புரியுத் தாய்மார்கள், தங்களது பிள்ளைகளை பார்ப்பதற்கு யாரும் இல்லாததால், அநேகமான நாள்களில் தொழிலுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனரெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் மீளவும் திறந்து செயற்படுமேயானால், 20 பிள்ளைகள் வரை, அந்நிலையத்தில் பராமரிக்க முடியுமென்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X