Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச
பதுளை பண்டாரவளை வீதி, நடுகாரகந்த வீதியில், மூன்று வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நால்வர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா - பரணகம லுணுவத்தே பிரதேசத்திலிருந்து பதுளைக்கு பயணித்த லொறியொன்று, முன்னால் சென்ற காரின் மீது மோதியுள்ளதுடன் காரானது மோட்டார் சைக்களினி மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற தொலொகஸ் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞரொவரும் கார் மற்றும் லொறியின் சாரதி ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர்.
லொறி சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்குக் காரணமென்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
40 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
2 hours ago