2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Janu   / 2025 ஜூலை 24 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய  மலைநாட்டின்  மேற்கு  சரிவுகளில்  தொடர்ந்து  பெய்து  வரும்  கனமழை  காரணமாக மேல்  கொத்மலை  நீர்த்தேக்கத்தின்  ஒரு  வான்  கதவு  வியாழக்கிழமை (23) அதிகாலை   திறக்கப்பட்டுள்ளதாக  நுவரெலியா  மாவட்ட  இடர்  முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் கொத்மலை  நீர் பிடிப்பு  பகுதிகளில்  தொடர்ந்து  கனமழை  பெய்தால்  நீர்த்தேக்கத்தின் மற்ற  வான்  பாதைகளும்  தானாகவே  திறக்கப்படும்  என்பதால் , நீர்த்தேக்க  அணையின்  கீழ் கொத்மலை  ஓயாவின்  இருபுறமும்  வசிப்பவர்கள்  எச்சரிக்கையாக  இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப் பகுதியில்  பெய்து  வரும்  கனமழை  காரணமாக  செண்கிளேயார்   மற்றும்  டெவோன் நீர்வீழ்ச்சிகளின்  நீர் மட்டமும்   அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஷ்.சதீஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .