Kogilavani / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் மீறிச் செயற்பட்டதன் காரணமாக, பதுளை மாநகரசபையின் பொறுப்பு, ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசித்த நலிந்தரங்கே தெரிவித்தார்.
பதுளை, கெப்பிட்டல் சிட்டி விடுதியில், நேற்று முன்தினம் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏட்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, பதுளை மாநகர சபையின் தலைமைப் பொறுப்பை, இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வழங்கியதா தெரிவித்தார்.
பதுளை மாநகர சபையில் மொத்தம் 25 உறுப்பினர்கள் இருந்தனர் என்றும் இவர்களில் ஐ.தே.க - 09, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி - 08, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 05, மக்கள் விடுதலை முன்னணி -03 என்ற அடிப்படையில் 25 பேர் இருந்தனர் என்றும் தெரிவித்தார்.
அன்றைய நிலையில், ஐ.தே.வினர் பதுளை மாநகர சபையில் ஆட்சியை அமைக்கக் கோரியதாகவும் ஆட்சிப் பங்கீடுகள் குறித்து ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும் அவர்கள் தம்மிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
அதற்கு தாம் செவிசாய்க்கவில்லை என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, தமது சகோதர கட்சியாக இருப்பதால் தங்களது இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இரண்டு வருடங்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரு வருடங்களும் ஆட்சிசெய்யும் வகையில் புரிந்துணவர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவித்தார்.
'முதல் இரண்டு வருடங்களுக்கான ஆட்சியை மேற்கொள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகிய நாம் கோரினோம். அவ்வேளையில், தற்போதைய பிரதமரான மகிந்த ராஜபக்ஷ, தொலைபேசி ஊடாக எம்முடன் தொடர்புகொண்டு, முதல் இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியே, ஆட்சி செய்யட்டும். அதற்கு விட்டுக் கொடுங்கள். அடுத்து வரும் இரு வருடங்களை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொறுப்பேற்கட்டும் என்றார்.
'இதனையடுத்து, நாம் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணிக்கு விட்டுக்கொடுத்தோம். அதன் அடிப்படையில், பதுளை மாநகர மேயர் பிரியந்த அமரசிறி நியமிக்கப்பட்டார். அவருக்கு பூரண ஆதரவை நாம் வழங்கி வந்தோம்' என்றார்.
எனினும் மொட்டு அணியினர் தம்முடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முற்றுமுழுதாக மீறி செயற்பட்டதாகவும் மக்கள் சேவைக்காக தமக்கான நிதியை ஒதுக்கவில்லை என்றும் அடுத்து வரும் இரு வருடங்களுக்கு ஆட்சியை ஒப்படைக்க அவர்கள் தயக்கம் காட்டியதாகவும் தமக்கெதிரான சதித்திட்டங்களையும் மேற்கொண்டதாகவும் சாடினார்.
தொடர்ந்தும் பொறுமைக்காக்க முடியாது என்பதால், 2021ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை சமர்ப்பிப்புகள் இரண்டுக்கும் எதிராக செயல்பட்டதாகவும் நிதி அறிக்கைகள் படுதோல்வியடைந்தும், சபையின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக இடைநிறுத்தப்பட்டதால், பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, பதுளை மாநகர சபை விடயத்தில் ஊவா மாகாண ஆளுநர் தலையீடு செய்து, விசேட ஆணையாளரின் பொறுப்பில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பதுளை மாநகர சபையை கொண்டு வந்தார் என்றும் அத்துடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில், பதுளை மாநகர சபையில் இடம்பெற்ற பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகளை, ஆளுநர் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
'புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேயரும் சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினரும் முற்றுமுழுதாக மீறி, எமக்கெதிரான சதித்திட்டங்களை மேற்கொண்டமையினாலேயே, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினருடன், எமக்கு பயணிக்க முடியாமல் போய்விட்டது. மொட்டு அணிக்கு வாக்களித்த மக்களுக்கு, அக்கட்சியினரே பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்' என்றும் கூறினர்.
16 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 Jan 2026
21 Jan 2026