Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 01 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுஜிதா
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை - ஹட்டன் A7 பிரதான வீதியில், தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக, இன்று (01) காலை 8.30 மணியளவில், இண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த பெண் ஒருவர், லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை நகரிலிருந்து நகரசபைக்கு வந்த மோட்டார் சைக்கிள்களே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், விபத்துக்குக் காரணம் அதிவேகத்துடன் பயணித்தமையே எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, இவ்வீதி வழியாக வாகனங்கள் அதிக வேகத்துடன் பயணிப்பதால், தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த பிரதேசத்தில் சமூர்த்தி வங்கி, பாடசாலை என்பன அமைந்திருப்பதால், இவ்வீதியை தினமும் பாடசாலை மாணவர்கள் உட்பட, 2000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், ஆகவே பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி, இவ்வீதியில் வேகத்தடைகளை போட்டுத் தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago