2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாத்திரை அமைப்பாளர் கைது

Kogilavani   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து 107 யாத்திரிகர்களை, தம்பதீவ யாத்திரைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்த கண்டியிலுள்ள தம்பதீவ யாத்திரை அமைப்பாளரை, கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர், கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி, 107 யாத்திரிகளை, தம்பதீவ யாத்திரைக்காக அழைத்துச் சென்றுள்ளார். சில நாட்களின் பின்னர், அவர்களது யாத்திரையைத் தொடர்வதற்குத் தன்னிடம் போதியளவு பணம் இல்லை என்றும் தெரிவித்து, யாத்திரிகர்களை அங்குள்ள புத்த காயவிலேயே தவிக்கவிட்டுள்ளார்.

இவ்வாறு, கடந்த 17 நாட்கள் அங்கேயே தங்கியிருந்த யாத்திரிகர்கள் அனைவரும், ஞாயிற்றுக்கிழமை (06) நாட்டுக்கு திரும்பினர். இவர்களுடன் அவரும் நாட்டுக்கு திரும்பும் போதே, கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .