Janu / 2026 மார்ச் 29 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காலை 7:30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கம்பஹா மாவட்டம், இம்புல்கொட பகுதியை சேர்ந்த 65 வயதுடைய தமயந்தி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (28) இரவு சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். தரிசனத்தை முடித்துக்கொண்டு மாகிரிதென்ன பகுதி ஊடாக திரும்பி வந்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் உறவினர்களின் உதவியுடன் நல்லதண்ணி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், உயிரிழந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
52 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
3 hours ago