எஸ்.சதிஸ் / 2019 ஜனவரி 14 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் இயங்கிவரும் யோகட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் கழிவு நீர் மற்றும் குப்பைகள் அனைத்தும், நிறுவனத்துக்கு அருகாமையிலுள்ள கொத்மலை ஓயாவில் கலக்கப்படுவதால், கொத்மலை ஓயாவின் நீர் மாசடைவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் யோகட்டின், பால் கலந்து நீர், கால்வாயொன்றின் மூலம், கொத்மலை ஓயாவில் கலப்பதாகவும் கொத்மலை ஓயா நீரை, பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் நிலையில், பாரிய அசௌகரியங்களையும் சுகாதார சீர்கேடுகளுக்கும் முகம்கொடுப்பதாக, மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த நீரில், பால் மனம் வீசுவதாகவும் எனவே, அதை, எந்தவொரு தேவைக்காகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில், கொட்டகலை பிரதேச சபை கவனம் செலுத்தி, குறித்த ஆற்று நீரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமாணி பிரசாத்தை, நேற்று (13) தொடர்புகொண்டு வினவியபோது,
பொதுமக்களால் தனக்கு முறைப்பாடு கிடைப்பதற்கு முன்னர், குறித்த நிறுவனத்தையும் கழிவு வெளியேற்றப்படும் முறை தொடர்பாக, தான் நேரில் சென்று பார்த்ததாகவும் குறித்த நிறுவனம், நீர்முகாமைத்துவ அதிகாரசபையின் கட்டுப்பாடுகளுக்கு அமையவே, செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அறிக்கைகளை, குறித்த நிறுவனம், தன்னிடம் வழங்கியுள்ளது என்றும் இவ்வாறு வெளியேற்றப்படும் நீர், வடிகட்டப்பட்டு, சுத்தமான நீராகவே, வெளியேற்றப்படுகின்றது என்றும் நிறுவன அதிகாரிகளின் அறிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். எனினும், இந்த நீர் காரணமாக, பிரதேச மக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக இருந்தால், தான், இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago