2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

ரப்பர் தோட்டத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

Janu   / 2025 நவம்பர் 10 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நக்கல்ல தோட்ட பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (10) காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள முப்பன்ன வெளிவத்த கயஸ்ரீ கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.கே. புஷ்பராஜ் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கசிப்பு  அருந்தி வந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X