Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 13 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டத்தில் உள்ள றைகம பெருந்தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் இன ரீதியாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில்,இவர்களின் தொடர் அச்சுறுத்தலுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தலையீட்டால் இப்பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வந்ததது.
இந்நிலையில், பெரும்பான்மை இனத்தவரின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், றைகம தோட்டத்திற்கு தீபாவளி தினத்தன்று (12) விஜயம் செய்த செந்தில் தொண்டமான், கேக் வெட்டி, பாட்டசு கொளுத்தி றைகம தோட்ட மக்களுடன் இணைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார்.
மேலும் அம்மக்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, செந்தில் தொண்டமான் உத்தரவிட்டார்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல் தலைமைகள் எமது தோட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில், எமக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் எங்களுடன் இணைந்து அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று தந்தது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மாத்திரமே என்று அத்தோட்ட மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
52 minute ago