2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

லிந்துலை தாக்குதல் சம்பவம்: மூவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரமேஷ்

லிந்துலை, வட்டகொடை பிரதான வீதியில் கூரிய ஆயுதங்களால் நபரொருவரைத் தாக்கி பலத்த காயத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் நலீன் திலக ஏரத், இன்று சனிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, அத்தினத்திலேயே குறித்த மூவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பு, ருவான்வெல்ல அல்லொவைச் சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதியான எஸ்.ஏ.ஸ்டேன்லி பெரேரா (வயது 55) என்பவர், கடந்த 10ஆம் திகதி இரவு தாக்கப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலேயே குறித்த மூவரும் நேற்று வெள்ளிக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டனர்.

இம்மூவரையும், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் நலீன் திலக ஏரத் முன்னிலை ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .