Janu / 2026 மார்ச் 29 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து சனிக்கிழமை (28) அன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழாய் கிணறு அமைக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் லொறி ஒன்றே இவ்வாறு நுவரெலியா - நானுஓயா - ராதல்ல குறுக்கு வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வீதியின் சரிவான பகுதியில் லொறி பயணித்துக் கொண்டிருந்த போது, அதன் பிரேக் செயலிழந்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுதத் எச். எம். ஹேவா

52 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
3 hours ago