Sudharshini / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ, வானகாடு தோட்டத்தில் களனிவெளி நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேயிலை தொழிற்சாலை கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் தாம் கொழுந்து அரைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வானகாடு, சிங்காரவத்தை, டன்பார் ஆகிய தோட்டங்களில்; பறிக்கப்படும் கொழுந்து, இத்தேயிலை தொழிற்சாலையிலே பதனிடப்படுகின்றது.
இந்நிலையில் திடீரென தொழிற்சாலையை எவ்வித முன் அறிவித்தலுமின்றி தோட்ட நிர்வாகம் மூடியுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், சிங்காரவத்தை வானகாடு, டன்பார் ஆகிய தோட்டங்களில் பறிக்கப்படும்; கொழுந்து, இன்ஞஸ்ரி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கே கொண்டுச் செல்ல வேண்டியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, வானகாடு தோட்ட தேயிலை தொழிற்சாலையை உடனடியாக திறக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .